Saturday, August 25, 2012

கனிகள் கொண்டுதரும் கண்ணன்-Kanikal konduvaum kannan

கண்ணன் என் காந்தன் 

கனிகள் கொண்டுதரும் கண்ணன் 
கற்கண்டு போலினிதாய்; 

பனிசெய் சந்தனமும் - பின்னும்
பல்வகை யத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான் - கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே - வண்ண
மியன்ற சவ்வாதும்.

கொண்டை முடிப்பதற்கே - மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே - கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே - செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்
பேசருந் தெய்வமடீ!

குங்குமங் கொண்டுவரும் - கண்ணன்
குழைத்து மார்பெழுத;
சங்கையி லாதபணம் - தந்தே
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல் - முகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ - பின்னோர்
வருத்த மில்லையடீ. 

Sunday, August 19, 2012

தொட்டு தொட்டு பேசவரான் கண்ணன்-Thottu thottu pesa varan kannan

பல்லவி 
தொட்டு தொட்டு பேசவரான் கண்ணன் 
அவன் துடுக்குதனத்தை அடக்கு வாரில்லை 

அனுபல்லவி 
பட்டி   மாடோட்டும் பாலகோபாலன் கட்டுக்கடங்காத கடல் அலை போல் துள்ளி (தொட்டு தொட்டு)

சரணம்
எட்டி நின்றாலும் இதயம் துடிக்குது, விட்டு சென்றாலும் கண்ணீர் வழியுது 
எட்டிரன்டடியோ ஏழை என் செய்வேன் என் செவி குளிர இன்னிசை ஊதினான் (தொட்டு தொட்டு)
கட்டித்தயிர் பால்வெண்ணை கலயத்தில் ஏந்தி கானவழியே 
நான் தனித்து போகையிலே 

கட்டிகரும்பே,  தேனே, கனியே என்றழைத்து கை வலை குலுங்க குறுநகை காட்டியே (தொட்டு தொட்டு) 

Pallavi: toTTu toTTu pEsa varAn avan tuDukkuttanattai aDakkuvAr illai
Anupallavi : paTTil mADOTTum bAlagOpalan kaTTuk-kaDangAda kaDal alai pOl tuLLI
Charanam: kaTTit-tayir pAl veNNai kalaiyattil Endi kAna vazhiyE nAn tanittu pOgaiyilE
kaTTi karumbE tEnE kaniyE enRazhaittu kai vaLai kulunga kuru nagai kATTiyE

பக்கல நிலப டி கொலிசே முச்சுட-pakkala nilapadi kolise muchuda



பல்லவி
பக்கல நிலப டி கொலிசே முச்சுட
பா க தெ ல் ப ராதா                            (ப)
அனுபல்லவி

சுக்கலராயநி கே ரு மோமு க ல
ஸுத தி ஸீதம்ம  சௌமித்ரி ராமுநி கிரு (ப)
சரணம்
தநுவுசே வந்த ந மொநரிஞ்சு சுந்நாரா
சநுவுந நாமகீர்த்தந ஸேயு சுந்நாரா
மநஸுந த லசி மைமறசி யு ந்நாரா
நெநருஞ்சி த்யாக ராஜுநிதோ ஹரிஹரி மீரிரு (ப)
The lyrics is in telugu.The meaning in tamil.
  சந்திரனைப் பழிக்கும் முகத்தையும் அழகிய பற்களையுமுடைய அன்னை சீதையே!
இலக்ஷ்மணனே! இராம பிரானுக்கு இரு புறமும் நின்று நீங்கள் சேவை செய்யும் மர்மத்தை எனக்கு தெரிவிக்கலாகாதா?
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவரை வணங்குகிறீர்களா? அல்லது பக்தியுடன் நாமசங்கீர்த்தனம் செய்கிறீர்களா?  மனத்தில் த்யானித்து மெய்மறந்து போகிறீர்களா?இத்யகராஜனிடம் அன்பு கூர்ந்து (மர்மத்தை விளக்கலாகாதா? )